கார் விபத்தில் சிக்கிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்

#India #Accident #Cricket #Player
Prasu
2 years ago
கார் விபத்தில் சிக்கிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார். இவர் இந்திய அணிக்காக 68 ஒருநாள் போட்டி, 6 டெஸ்ட் போட்டி, 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 

அவர் அவுட் சுவிங், இன் சுவிங் என புது பந்தில் மிரட்டுவார். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார். 2011- ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் விளையாடினார்.கடைசியாக 2012-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

இந்நிலையில் மீரட்டில் பிரவீன் குமார் மற்றும் அவரது மகன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அதிஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். 

வேகமாக வந்த லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து வீசாரணை நடத்தி வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4