கர்நாடகாவில் வெள்ளத்தில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு!

#India #world_news #Rain #Flood #HeavyRain #Tamilnews #Breakingnews #ImportantNews #Bangalore
Mani
1 year ago
கர்நாடகாவில் வெள்ளத்தில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது, ஆனால் அந்த மாதத்தில் போதுமான மழை பெய்யவில்லை. தற்போது, ​​மாநிலம் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. அதுபோல் கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இந்த நிலையில், கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கர்நாடகாவில் வெள்ளநீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. உடுப்பி, சிக்கமகளூர், குடகு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 7ஆம் தேதி (சனிக்கிழமை) வரை அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!