எலிசபெத் ராணியை கொலை செய்ய திட்டமிட்ட இந்திய வம்சாவளி இளைஞர்
1919 ஆம் ஆண்டு அமிர்தசரஸ் படுகொலைக்கு பழிவாங்கும் முயற்சியில் ராணியைக் கொல்ல முயன்றதாகக் கூறப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் குற்றவாளி என ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
21 வயதான ஜஸ்வந்த் சிங் சைல், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி, மறைந்த மன்னர் இரண்டாம் எலிசபெத் ராணியின் தனிப்பட்ட இல்லமான வின்ட்சர் கோட்டையில் வைத்து பிடிபட்டார்.
“நான் ராணியைக் கொல்ல வந்திருக்கிறேன்,” என்று சைல் ஒரு பொலிஸ் அதிகாரியிடம் கூறியிருந்தார். சாம்ராஜ்ஜியத்தை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சாதி திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவித்தார்.
விசாரணையின் போது வழக்கறிஞர் கூறியபடி, சைலின் முக்கிய நோக்கம் ஒரு புதிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதாகும்.
மேலும் அரச குடும்பத்தின் தலைவரை அகற்றுவதன் மூலம் பிரிட்டிஷ் பேரரசின் அனைத்து எச்சங்களையும் அழிப்பதன் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும் என்று அவர் நம்பினார்” என்று கூறியுள்ளார்.