பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் டீசர் வெளியீடு

#Cinema #Actor #Actress #Director #trailer #Movies #Movie
Mani
2 years ago
பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் டீசர் வெளியீடு

கே.ஜி.எப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது தனது அடுத்த படமான 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். 'பாகுபலி' படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் இப்படத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘சலார்’ படத்தின் டீசர் ஜூலை 6-ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் 'சலார்' படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4