சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' படத்தின் 'வா வீரா' பாடல் வெளியீடு

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Young #2023 #Movies #Movie
Mani
2 years ago
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' படத்தின் 'வா வீரா' பாடல் வெளியீடு

சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்கில் இப்படத்திற்கு 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது படக்குழு படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் டப்பிங் முடிந்துவிட்டதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

'மாவீரன்' படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'வா வீரா' பாடல் இன்று வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4