மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" என்ற பெயரில் டிரைலர் வெளியீடு

#Cinema #Film #trailer #Movie
Mani
2 years ago
மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" என்ற பெயரில் டிரைலர் வெளியீடு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படம் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் பலரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது மற்றும் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் வெற்றியை பாராட்டி ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் மினி கூப்பர் காரை பரிசாகப் பெற்றார் இயக்குநர் மாரி செல்வராஜ். ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" என்ற பெயரில் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

மேலும், படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4