அதிரடியாக அதிகரித்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு

#India #Tamil Nadu #prices #Tamilnews #Gold #Breakingnews
Mani
1 year ago
அதிரடியாக அதிகரித்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு

சென்னை:

கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்தது. நேற்று மாலை ஒரு கிராம் ரூ.5,457 ஆகவும், சவரன் ரூ.43,656 ஆகவும் இருந்தது.

இன்று காலை கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.5,495க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.43,960ஐ எட்டியது.

மேலும், வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டது. கிராமுக்கு ரூ.1 அதிகரித்தது இன்று காலை நிலவரப்படி, வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.76.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.76,700 ஆகவும் இருந்தது.