'சலார்' படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததால் படக்குழு புதிய அப்டேட் அறிவிப்பு

#Cinema #Film #Tamilnews #Movie
Mani
2 years ago
'சலார்' படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததால் படக்குழு புதிய அப்டேட்  அறிவிப்பு

கே.ஜி.எப். திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்த படமான ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது.'சலார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், 'சலார்' படத்தின் டீசர் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது மற்றும் படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் மாத இறுதியில் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அப்டேட்டை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4