அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

#India #Tamil Nadu #Rain #Tamilnews #Chennai
Mani
2 years ago
அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை:

வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4