அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் சனிக்கிழமை ஆரம்பம்

#SriLanka #Lanka4 #Train
Kanimoli
2 years ago
அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள்  சனிக்கிழமை ஆரம்பம்

அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை வரையிலான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில்களுக்கான ஆசன முன்பதிவு சேவையும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் பாதையிலான போக்குவரத்து கடந்த ஜனவரி மாதம் வீதி புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4