ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களை வென்றது
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று இந்தியர்கள் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் ஜோதி யர்ராஜி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 23 வயதான ஜோதி யர்ராஜி 13.09 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.
ஜப்பானிய ஓட்டப்பந்தய வீரர்களான டெராடா அசுகா (13.13 வினாடிகள்) மற்றும் அயோகி மசுமி (13.26 வினாடிகள்) இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர். நான்காவதாக வந்த இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனையான ராம்ராஜ் நித்யா 13.55 வினாடிகளில் தூரத்தை கடந்தார்.
அஜய்குமார் சரோஜ் 1500 மீ ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தினார். மும்முறை தாண்டுதலில் அப்துல்லா அபூபக்கரும் தங்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் ஐஸ்வர்யா மிஸ்ரா வெண்கலப் பதக்கம் வென்றார்.