ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இன்று 2 தங்கப் பதக்கங்களை வென்றது

#India #world_news #sports #2023 #Gold #Sports News
Mani
2 years ago
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இன்று 2 தங்கப் பதக்கங்களை வென்றது

பாங்காக்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தற்போது நடைபெற்று வருகிறது. 16ம் தேதி வரை தொடரும் இந்த போட்டியில் இரண்டாம் நாள் பந்தயங்கள் நிறைவடைந்ததையடுத்து, இந்தியா 3 தங்கம், 3 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஜப்பான் 7 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 3 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 2வது இடத்திலும் உள்ளன.

3வது நாளான இன்று இந்தியா மொத்தம் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் 20.23 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல், பெண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பருல் சௌத்ரி 9.38 நிமிடங்களில் பந்தயத்தை முடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4