மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

#India #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மற்றும் மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கமாக உள்ளது.

நேற்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக வினாடிக்கு 400 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேசமயம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 107 கன அடியில் இருந்து இன்று காலை 130 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 78.51 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 77.61 அடியாக குறைந்துள்ளது. மொத்த நீர் இருப்பு 39.61 டி.எம்.சி.யாக உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4