'மாநாடு' படத்தின் இந்தி ரீமேக்கில் ராணா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது

#Cinema #Actor #Movie
Mani
2 years ago
'மாநாடு' படத்தின் இந்தி ரீமேக்கில் ராணா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து திரையுலகில் புயலை கிளப்பியது. எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மாநாடு படத்தின் இந்தி, தெலுங்கு ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு மத்தியில் தெலுங்கு நடிகர் ராணா குடும்பத்தினர் ரூ.12 கோடிக்கு வாங்கியதாக கூறப்பட்டது. சிம்பு வேடத்தில் நடிக்க முக்கிய நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாநாடு இந்தி ரீமேக்கில் வருண் தவான் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ‘மாநாடு’ படத்தின் இந்தி ரீமேக்கில் ராணா நடிப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரவீன் சத்தா டைரக்டு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. வில்லனாக நடிக்க ரவிதேஜாவிடம் பேசி வருகிறார்கள்.

'மாநாடு' படத்தின் தெலுங்கு ரீமேக்கான நடிகர்கள் தற்போது தெரியவில்லை. தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக்குகளின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் தொடங்க உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4