லியோ படப்பிடிப்பு நிறைவு லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்

#Cinema #TamilCinema #Vijay #Movie
Mani
2 years ago
லியோ படப்பிடிப்பு நிறைவு  லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

'லியோ' படத்தின் "நா ரெடி" என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் தனக்கான காட்சிகளை நடிகர் விஜய் நிறைவு செய்தார்.

இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 மாதமாக நடைபெற்று வந்த 'லியோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதற்கான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4