அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டியில், பிவி சிந்து தோல்வி அரையிறுதியில் லக்சயா சென்

#America #sports #Breakingnews #Sports News
Mani
2 years ago
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டியில், பிவி சிந்து தோல்வி அரையிறுதியில் லக்சயா சென்

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, தனது எதிரியான சீனாவின் காவ் பாங் ஜீ-யை எதிர்கொண்டார்.

இதில் முதல் செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் 20-22 என இழந்தார். ஆனால் 2-வது செட்டில் விரைவாக தோல்வியை ஒப்புக்கொண்டார். காவ் பாங் 2-வது செட்டை 21-13 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்

உலகத் தரவரிசையில் 36-வது இடத்தில் இருக்கும் காவ் பாங்கை தனது எதிரியாகப் பார்க்கிறார் பி.வி.சிந்து, அவருக்கு எதிராக நான்கு முறை விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். கடந்த வரும் கனடாவில நடைபெற்ற கனடா ஓபனில் தோற்கடித்திருந்தார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் லக்சயா சென், சங்கர் முத்துசாமியை எதிர்கொண்டார். லக்சயா சென் 21-10, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று, எளிதான வெற்றியைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

முத்துசாமி முதல் இரண்டு போட்டிகளில் முன்னணி வீரர்களை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 8-ம் தரநிலை பெற்றிருந்த வீரரையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4