ஏய் இங்க நான்தான் கிங்கு இணையத்தில் வைரலாகி வருகிறது ஜெயிலர் க்ளிம்ப்ஸ் வீடியோ

#Cinema #TamilCinema #Tamilnews #Movie
Mani
2 years ago
ஏய் இங்க நான்தான் கிங்கு இணையத்தில் வைரலாகி வருகிறது ஜெயிலர் க்ளிம்ப்ஸ் வீடியோ

கோலமாவு கோகிலா, டாக்டர், மிருகம் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பிற முக்கிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் 'ஜெயிலர்' 'காவாலா' வெளியாகி யூடியூப்பில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதையடுத்து, படத்தின் இரண்டாவது பாடலான 'இது டைகரின் கட்டளை' பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4