சந்திரயான் - 3 விண்கலத்தை 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றி - இஸ்ரோ தகவல்

#India #2023 #Tamilnews #ImportantNews #Scientist #Rocket #Space
Mani
1 year ago
சந்திரயான் - 3 விண்கலத்தை 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றி - இஸ்ரோ தகவல்

நிலவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3, விண்கலம் கடந்த 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இந்தநிலையில், சந்திரயான் -3 ஐ 2-வது புவிவட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக முடிந்தது எனவும் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி மீண்டும் நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

முன்னதாக 179 கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான்-3, 226 கிமீ தூரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 தற்போது 41,603 கிமீ x 226 கிமீ தொலைவில் பூமியைச் சுற்றி வருகிறது.