கொலை திரைப்படத்தின் இறுதி டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

#India #Cinema #TamilCinema #2023 #Tamilnews
Mani
2 years ago
கொலை திரைப்படத்தின் இறுதி டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பன்முகத் திறமைக்கு கொண்ட விஜய் ஆண்டனி, தற்போது கிரைம் திரில்லர் வகை படமான 'கொலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கு முன்பு 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக சிவகுமார் விஜயன் பணியாற்றியுள்ளார். படத்திற்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கொலை படத்தின் இறுதி டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'ஒரு பொய்யோட சத்தம் எப்படி கேக்கும்னு காதுக்கு நல்லா தெரியும்' போன்ற வசனங்கள் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4