ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு

#India #sports #Breakingnews #ImportantNews #Sports News
Mani
1 year ago
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலில் 1951 ஆம் ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய விளையாட்டு விழாவாக நடத்தப்படுகிறது. சமீபத்திய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 இல் இந்தோனேசியாவில் நடைபெற்றது.

அதன்பிறகு, 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை சீனாவின் உள்ள ஹாங்சோவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் 25 வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23 ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 40 விளையாட்டுக்கள் 482 பிரிவில் நடைபெறுகிறது.

இதையடுத்து ஆசிய விளையாட்டு போட்டியில் 800 பேர் கொண்ட இந்திய குழு பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாடும் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை கடந்த 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துசண்டை, செஸ், கிரிக்கெட், வாள் வீச்சு, ஆக்கி, கபடி, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இந்திய அணி கலந்து கொள்கிறது.

ஜகார்தாவில் 2018-ம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 524பேர் கொண்ட இந்திய அணி 36 விளையாட்டுகளில் பங்கேற்றது. அதில் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களை பெற்று இந்தியா 8-வது இடத்தை பிடித்து இருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!