'டிடி ரிட்டன்ஸ்' படத்தில் புதிய அப்டேட் கொடுத்த சந்தானம் படக்குழு

#Cinema #Actor #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
'டிடி ரிட்டன்ஸ்' படத்தில் புதிய அப்டேட் கொடுத்த சந்தானம் படக்குழு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்டராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது மற்றும் மானசி ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தின் இரண்டாவது பாடலின் அறிவிப்பு நாளை வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4