விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

#India #Cinema #Actor #TamilCinema #Tamilnews #ImportantNews #Movie
Mani
2 years ago
விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். மேலும், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.

சமீபத்தில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. இதையடுத்து, 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஹிஸ் நேம் இஸ் ஜான்' பாடல் நேற்று (ஜூலை 19) காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4