டைனோசர்ஸ் படக்குழு புதிய கதாப்பாத்திரத்தை அறிமுகம்

#India #Cinema #Actor #TamilCinema #release #2023 #trailer #Tamilnews #Movie
Mani
2 years ago
டைனோசர்ஸ் படக்குழு புதிய கதாப்பாத்திரத்தை அறிமுகம்

அறிமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டைனோசர்ஸ்’. உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பிற நடிகர்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

நேற்று 'டைனோசர்ஸ்' படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிமுகம் செய்தது. இந்நிலையில் புதிய கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படத்தில் துரையாக மாறா நடித்துள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'டைனோசர்ஸ்' திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4