எல்.ஜி.எம். படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Director #release #Tamilnews
Mani
2 years ago
எல்.ஜி.எம். படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் மகேந்திர சிங் தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து தங்கள் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 'தோனி எண்டர்டெயின்மென்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருக்கும் இப்படம் காதல் கதையைக் கொண்டது. இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். 'எல்.ஜி.எம்' படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'எல்.ஜி.எம்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் போஸ்டரை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4