மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

#people #Tamilnews #Breakingnews #ImportantNews #Mumbai
Mani
2 years ago
மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பாக புனே மற்றும் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்கள் உள்ளன.

இதனால் நிலச்சரிவில் சுமார் 30 குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காலை நிலவரப்படி நிலச்சரிவில் இருந்து 25 பேர்மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

21 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4