வசந்த மாளிகை திரைப்படம் நாளை ரீரிலீஸ்

#Cinema #Actor #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
வசந்த மாளிகை திரைப்படம் நாளை ரீரிலீஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி "வசந்த மாளிகை" திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் வாணிஸ்ரீ, நாகேஷ் மற்றும் பிற நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கிய இப்படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார். பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.

காதலுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பாடல்கள் தற்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதை கொண்டாடும் விதமாக நாளை (ஜூலை 21, வெள்ளிகிழமை) இந்த திரைப்படம் டிஜிட்டல் தரத்தில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்த திரைப்படம் முன்னதாக 2013 மற்றும் 2019ம் ஆண்டு இந்த திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் நாளை வெளியாகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4