தேசிய டைவிங் வெள்ளி பதக்கம் வென்றார் சென்னை சிறுமி

#India #sports #Chennai #Sports News
Mani
2 years ago
தேசிய டைவிங் வெள்ளி பதக்கம் வென்றார் சென்னை சிறுமி

சென்னை, தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் மற்றும் தேசிய நீச்சல் சம்மேளனம் இணைந்து, 39வது சப் - ஜூனியர் மற்றும் 49வது ஜூனியர் தேசிய 'டைவிங்' மற்றும் 'வாட்டர் போலோ' போட்டிகள், வேளச்சேரியில் நடக்கின்றன.

2-வது நாளான நேற்று நடைபெற்ற குரூப் 3 சிறுமியருக்கான 1 மீ. ஸ்பிரிங் போர்டு டைவிங் போட்டியில் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை ஆர். ஆராதனா 140.80 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்பிரிவில் மத்திய பிரதேச வீராங்கனை அனன்யா யாதவ் 150.55 புள்ளிகள் பெற்று தங்கத்தை தட்டிச்சென்றார்.

ஆண்கள் பிரிவில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆருஷ் ரகுவன்ஷி 192.25 புள்ளிகளுடன் முதலிடத்தையும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்ரேயாஷ் சக்பால் 191.85 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும், ரன்வீர் காடே 178 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பிளாட்பார்ம் டைவிங்கில் குரூப் 2 சிறுவரில் சுப்ரதீப் சாஹாவும்(சர்வீசஸ்), சிறுமியர் பிரிவில் ஷரவானி சூர்யவன்ஷியும்(மகாராஷ்டிரா) தங்கம் வென்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4