மகாராஷ்டிரா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

#India #Death #2023 #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
மகாராஷ்டிரா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழையின் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, புனே மற்றும் மும்பை தற்போது அதிக கனமழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 30 பழங்குடியின குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் இருந்து 25 பேர் மீட்கப்பட்டனர். நேற்று வரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

தகவல் கிடைத்ததும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். தேசிய பேரிடர் மீட்புக்குழு படைகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று மேலும் 5 உடல்களை மீட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4