கங்குவா திரைப்படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியீடு

#Cinema #Actor #TamilCinema #Tamilnews #Breakingnews #Movie
Mani
2 years ago
கங்குவா திரைப்படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியீடு

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் "கங்குவா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'கங்குவா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சூர்யாவின் பிறந்தநாளான 23ஆம் தேதி கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'கங்குவா' படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். அதன்படி, 'அவன் கண்கள் வாளை விட கூர்மையானது' என்று குறிப்பிட்டு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று நள்ளிரவு 12.01-க்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4