ஜெயிலர் படத்தின் இசை வெளியீடு விழா வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

#Cinema #Actor #TamilCinema #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
ஜெயிலர் படத்தின் இசை வெளியீடு விழா வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பிற முக்கிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4