'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

#Cinema #Actor #TamilCinema #Tamilnews #Movie
Mani
2 years ago
'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் "கங்குவா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'கங்குவா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 23-ந்தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4