'கங்குவா'வில் சூர்யாவுக்கு வில்லனாகும் பாபி தியோல்

#India #Cinema #Actor #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
'கங்குவா'வில் சூர்யாவுக்கு வில்லனாகும் பாபி தியோல்

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்றது என்றும் இந்த படப்பிடிப்பில் பிளாஷ்பேக் சரித்திர கால காட்சியின் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் பிளாஷ்பேக் காட்சிகள் நட்டி நடராஜன் வில்லனாக நடித்துள்ளதாகவும் அவருடன் சூர்யா மோதும் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ‘கங்குவா’ படக்குழு பாங்காக் செல்வதாகவும், இதில் படக்குழுவினர்களுடன் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இணைகிறார் என்றும் சூர்யா மற்றும் பாபி தியோல் போதும் ஆக்ரோஷமான ஸ்டண்ட் காட்சிகள் பாங்காக்கில் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4