ஹீரோயினாக அறிமுகமாகும் பேபி சாரா!

#India #Cinema #Actress #TamilCinema #baby #Tamilnews
Mani
2 years ago
ஹீரோயினாக அறிமுகமாகும் பேபி சாரா!

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வதிருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே பேபி சாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். மீண்டும் விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் படத்திலும் சாரா நடித்திருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தியில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்திருந்தார்.மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகத்திலும் நந்தினியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். தற்போது ‘கொட்டேஷன் கேங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் சாரா கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். நடிகை சாராவை இயக்குனர் ஏ.எல்.விஜய் தான் கதாநாயகியாக அறிமுகப்படுத்த உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் சாராவை தெய்வீக அழகுடன் காண்பித்துவிட்டார். இனி சாரா தைரியமாக ஹீரோயினாக நடிக்கலாம். அவரை 2025 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகப்படுத்த இருக்கிறேன் என்று ஏ.எல்.விஜய் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4