கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் குறித்த புதிய தகவல்

#India #Cinema #Actor #TamilCinema #Movie
Mani
2 years ago
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் குறித்த புதிய தகவல்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி இசையமைத்துள்ளார்.

இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், கேப்டன் மில்லரின் டீசர் வெளியீடு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, படத்தின் டீசர் தயாராகிவிட்டதாகவும், விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4