'ஜெயிலர்' படத்தில் மூன்றாவது பாடலான "ஜுஜுபி" என்ற பாடல் நாளை வெளியீடு என படக்குழு அறிவிப்பு

#India #Actor #Tamilnews #ImportantNews #rajini kanth #Movie
Mani
2 years ago
'ஜெயிலர்' படத்தில் மூன்றாவது பாடலான "ஜுஜுபி" என்ற பாடல் நாளை வெளியீடு என படக்குழு அறிவிப்பு

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பிற முக்கிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தில் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, "ஜுஜூபி" என்ற பாடலை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். மூன்றாவது சிங்கிள் தான வேணும்? அதுலாம் ஜுஜுபி மேட்டர்.. என்று குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4