தமது வருகையின் 200 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு மலையகத் தமிழ் மக்கள் பாத யாத்திரை

#SriLanka #Tamil People #Lanka4 #இலங்கை #லங்கா4
தமது வருகையின் 200 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு மலையகத் தமிழ் மக்கள் பாத யாத்திரை

மலையக தமிழ் மக்கள் தமது வருகையின் 200 ஆவது வருடப்பூர்த்தியை நினைவுகூரும் வகையில் பாத யாத்திரை ஒழுங்கு செய்துள்ளனர்.

 முழுமையான மற்றும் சமமான உரிமைகள் பெற்ற பிரஜைகளாக இலங்கையில் வாழும் சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே இந்த பாத யாத்திரையின் கருப்பொருளாகும். 

 மாண்புமிகு மலையக மக்கள் அமைப்பினர் அதற்காக 11 பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவை வருமாறு, 

 1.எமது வரலாறு, போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அவற்றை அங்கீகரித்தல். 

 2.ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக்கொண்ட, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகாரம். 

 3.தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேடமாக இச் சமூகத்தை இலக்கு வைத்து விசேட செயற்பாடுகளை செயற்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை.

 4.வாழ்விற்கான ஓர் ஊதியம், கண்ணியமான வேலை, சட்டப்பாதுகாப்பு மற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம்.

 5.தொழிலாளர்களிலிருந்து சிறு நில உடமையாளர்களாக மாறும் பொருட்டு வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பாதுகாப்பான உரிமைக்காலத்துடனான காணி உரிமை 

 6.தமிழ் மொழிக்கு சமமான பயன்பாடு மற்றும் சம அந்தஸ்து.

 7.அரசாங்க சேவைககளை சமமான அணுகல். 

 8.பெருந்தோட்டங்களிலுள்ள மனிதக் குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம் செய்தல். 

 9.வீட்டுப் பணியாளர்களின் ழுதுமையான பாதுகாப்பு. 

 10.மலையகக் கலாசாரத்தை பேணுதல் மற்றும் மேம்படுத்துதல். 

 11.அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆளுகையில் ஓர் அர்த்தமுள்ள வகிபங்கை வழங்கும் ஒப்புரவான மற்றும் உள்ளடங்கலான தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப்பகிர்வு. 

 இவை இறுதிப்படுத்தப்பட்ட கோரிக்கைகள் அல்ல, பாத யாத்திரையின்போது பலரும் யோசனைகளை முன்வைக்கலாம். அவற்றை எல்லாம் உள்வாங்கி, கருத்தாடலை உருவாக்கி மேலும் பல கோரிக்கைகளை உள்வாங்கி, இறுதிபடுத்தப்பட்ட கோரிக்கை ஆவணம் முன்வைக்கப்படும்.

அதேவேளை பாத யாத்திரைக்கு அனைத்து இன மக்களின் ஆதரவும், பங்களிப்பும் தமக்கு ஒரு பேருதவியாக அமையுமென அதன் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4