டெங்கு ஒழிப்பு பணிகளில் இருந்து விலகிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

#SriLanka #Health #LANKA4 #Public #Dengue #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
56 minutes ago
டெங்கு ஒழிப்பு பணிகளில் இருந்து விலகிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இன்று (20) முதல் நாடு தழுவிய ரீதியில் அனைத்து டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளில் இருந்தும் விலகுவதற்கு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரி தன்னிச்சையான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (19) இரவு நடைபெற்ற சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை (21) நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளருக்கு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4