இலங்கை வந்துள்ள பிரான்ஸ் புகழ் பெற்ற பாண் தயாரிப்பாளர் தர்ஷன் செல்வராஜா

#SriLanka #France #Lanka4 #இலங்கை #லங்கா4
இலங்கை வந்துள்ள பிரான்ஸ் புகழ் பெற்ற பாண் தயாரிப்பாளர் தர்ஷன் செல்வராஜா

பிரான்சில் புகழ்பெற்ற பாண் தயாரிப்பாளரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன் செல்வராஜா இலங்கை வந்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் இலங்கை விஜயத்தின் ஒரு பகுதியாக இவர் வருகை தந்துள்ளார்.

 யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா இலங்கைக்கான மூன்று வார பயணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை தனது இரு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன்  வந்தடைந்துள்ளார்.

  2009 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர்ந்த தர்ஷன் செல்வராஜா 2011 ஆம் ஆண்டு பாண் பேக்கரி கடையொன்றை ஆரம்பித்து  பிரான்சில் ஆண்டுதோறும் நடைபெறும் பாண் தயாரிக்கும் போட்டியில் (Grand Prix de la Baguette de Traditional Francaise de la Ville De Paris ) வென்றிருந்தார்.

  இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஒரு வருடத்திற்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிடைத்திருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4