வாழைத்தண்டு சாம்பார்! புதிய முறையில் செய்து பாருங்கள், ருசியோ ருசி!

#India #Recipe #Cooking #Food #Tamilnews #Tamil Food
Mani
2 years ago
வாழைத்தண்டு சாம்பார்!  புதிய முறையில் செய்து பாருங்கள், ருசியோ ருசி!

தேவையான பொருட்கள்:

1 துண்டு வாழைத்தண்டு

10 சின்ன வெங்காயம்

1 தக்காளி

1 கப் துவரம் பருப்பு

1/2 கப் புளித்தண்ணீர்

சாம்பார் பொடி தேவையான அளவு

1/2 சிட்டிகை மஞ்சள் பொடி

உப்பு தேவையான அளவு மல்லித் தழை சிறிது

செய்முறை:

வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். வாழைத் தண்டை விரும்பிய அளவில் நறுக்கி வைக்கவும். துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கச் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கி நறுக்கிய வாழைத்தண்டைச் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய வாழைத் தண்டுடன் புளித்தண்ணீர் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். கொதித்ததும் மல்லித் தழை தூவி இறக்கவும். மணமணக்கும் வாழைத்தண்டு சாம்பார் தயார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4