துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது

#India #Cinema #TamilCinema #release #2023 #Tamilnews #Movie
Mani
2 years ago
துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து  புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிங் ஆஃப் கோதா’. இது ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார், ஜேக்ஸ் பிஜோய் மற்றும் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளனர்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது.

இன்று (ஜூன் 28) இப்படத்தின் முதல் பாடலான 'கலாட்டாக்காரன்' பாடல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4