கேப்டன் மில்லர் டீசர் யூடியூப்பில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது

#Cinema #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
கேப்டன் மில்லர் டீசர் யூடியூப்பில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி இசையமைத்துள்ளார்.

இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாளான இன்று (ஜூன் 28) நள்ளிரவு 12:01 மணிக்கு வெளியாகி சமூக வலைதளங்களில் தற்போது பிரபலமாக உள்ளது. இந்த டீசர் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4