இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு !

#India #India Cricket #Cricket #sports #2023 #match #Tamilnews #Sports News
Mani
2 years ago
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு !

தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அதே மைதானத்தில் இன்று நடக்கிறது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் போட்டிக்கு டாஸ் செய்யப்பட்டது, மேற்கிந்திய தீவுகள் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக தலைமை வகிக்கிறார். இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4