லியோ படத்தின் புதிய அப்டேட்டைக் கொண்டு வருகிறார் ஆண்டனி தாஸ்

#India #Cinema #Actor #Actress #TamilCinema #2023 #Tamilnews
Mani
2 years ago
லியோ படத்தின் புதிய அப்டேட்டைக் கொண்டு வருகிறார் ஆண்டனி தாஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரம் ஆண்டனி தாஸ் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4