இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளது

#SriLanka #Fuel #Lanka4 #kanchana wijeyasekara #petrol
Kanimoli
2 years ago
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளது

தேவையான குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான கட்டளைகளை வழங்குமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களையும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொள்கிறார்.

 இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரம் நாடளாவிய ரீதியாக செயற்படும் ஒக்டேன் 92ரக பெற்றோலை விநியோகிக்கும் 101 எரிபொருள் நிலையங்கள் 50 சதவீதமான கையிருப்பினை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன் ஒட்டோ டீசலை விநியோகிக்கும் 61 விநியோகஸ்த்தர்களும் 50 சதவீதமான கையிருப்பை கொண்டிருக்கவில்லை எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 30.07.2023 காலை 8.30 மணி நிலவரப்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ள எரிபொருள் இருப்பு பின்வருமாறு.

 Diesel – 124,690

 Sup. Diesel – 5,651

 92 Pet – 19,903 95 

Pet – 4,537

 JET A1 – 26,539

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4