Netflixல் நம்பர் ஒன் பிடித்த மாமன்னன் திரைப்படம்

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Tamilnews #Movie
Mani
2 years ago
Netflixல் நம்பர் ஒன் பிடித்த மாமன்னன் திரைப்படம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள “மாமன்னன்” திரைப்படம் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" என்ற பெயரில் ஜூலை 14-ம் திரையரங்குகளில் வெளியானது. மேலும் இப்படம் ஜூலை 27ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4