பாகிஸ்தானில் கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு! 40 பேர் உயிரிழப்பு

#Death #world_news #Pakistan #BombBlast
Mayoorikka
2 years ago
பாகிஸ்தானில் கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு! 40 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் - கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா - இ - இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.

 அப்போது திடீரென குண்டு வெடித்ததில் இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

 குறித்த குண்டு தாக்குதல் பாகிஸ்தானின் பஜௌர் நகரில் அரசியல் கூட்டத்தை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4