மகாராஷ்டிராவில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து : 15 பேர் பலி!

#India #Death #Lanka4
Thamilini
2 years ago
மகாராஷ்டிராவில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து : 15 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் சம்ருத்தி விரைவுச் சாலையில் கிரேன் ஒன்று சரிந்து விழுந்ததில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விபத்து இன்று (80.01) இடம்பெற்றுள்ளது. 

சம்ருத்தி விரைவுச்சாலையின் மூன்றாம் கட்ட கட்டுமானத்தின் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை  குழுக்கள் அந்த இடத்தில் பணிபுரிந்து வருவதாக செய்தி நிறுவனமான  ANI தெரிவித்துள்ளது. 

இடிந்து விழுந்த கட்டமைப்பிற்குள் குறைந்தது ஐந்து பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

குறித்த கிரேனானது நெடுஞ்சாலை மற்றும் அதிவேக ரயில் பாலம் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. 

இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4