புவி சுற்று வட்டப்பாதையை நிறைவு செய்தது சந்திராயன் 3 நிலவை நோக்கி பயணம்!

#India #Moon #Tamilnews #ImportantNews #Scientist #Space
Mani
2 years ago
புவி சுற்று வட்டப்பாதையை நிறைவு செய்தது சந்திராயன் 3 நிலவை நோக்கி பயணம்!

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ கடந்த 14ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.

இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது. சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் ஏற்கனவே ஐந்து நிலைகளில் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக முடிவடைந்ததை இஸ்ரோ உறுதி செய்துள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் நேற்று நள்ளிரவு பூமியின் சுற்றுவட்டப் பாதையை நிறைவு செய்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும். பின்னர், ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆகிய தேதிகளில் விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4