இந்தியாவில் முதல்முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை!

#State #Train #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
இந்தியாவில் முதல்முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. மேலும் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நாட்டில் முதல் முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரெயில் இயக்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறும்போது, இந்தியாவில் முதல் முறையாக தமிழகம்-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஓசூர்-கர்நாடகாவின் பொம்மசந்திரா இடையே மெட்ரோ சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது என்று தெரிவித்தது. மேலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான திட்ட செலவை இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4