டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் படக்குழு புதிய அறிவிப்பு

#India #Actor #Actress #Director #Tamilnews #Breakingnews #ImportantNews #Movie
Mani
2 years ago
டிமான்ட்டி காலனி 2 திரைப்படம்  படக்குழு புதிய அறிவிப்பு

முதல் பாகமான 'டிமான்ட்டி காலனி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாம் பாகத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். அருள் நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, படத்தின் ஆரம்ப தோற்ற போஸ்டர் நாளை மாலை 5.01 மணிக்கு வெளியிடப்படும் என்றும், படக்குழு ஏற்கனவே ஒரு போஸ்டரையும் பகிர்ந்துள்ளது.

'டிமான்ட்டி காலனி -2' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4